சினிமா

இன்னும் 20 நாட்களில்.. நடிகை கஸ்தூரி எடுக்கவிருக்கும் அதிரடியான முடிவு! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Summary:

நடிகை கஸ்தூரி தனக்கு இரு பெரிய கட்சிகளில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும், எந்த கட்சியில் சேருவேன் என்பது குறித்து 20 நாளில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் கஸ்தூரி. இவர் சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் கஸ்தூரி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என எவருக்கும் அஞ்சாமல் பல பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமீபத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறையில் தனியார் செல்போன் நிறுவன ஷோரூம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

 அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநிலத்தின் இரண்டு பெரிய கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. மற்ற கட்சிகளில் இருந்தும், புதிதாக தொடங்கப்படும் கட்சியிலிருந்தும் எனக்கு அழைப்பு வருகிறது. எந்த கட்சியில் சேரவுள்ளேன் என்பது குறித்து 20 நாட்களில் அறிவிப்பேன். ரஜினி தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்கு அனுகூலமாக இருக்கும். ரஜினி கூட்டணி அமைத்தால் பா.ஜ.கவுக்கு அனுகூலமாக இருக்கும் என்பது எனது கருத்து. நல்லவர்கள் ஆடசிக்கு வரவேண்டும். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என கூறியுள்ளார் .


 


Advertisement