சினிமா

டிவியில ரஜினியோட அந்த பாட்டு போட்டாலே நடிகர் கார்த்தி என்ன செய்வாராம் பார்த்தீர்களா!! செம கியூட்ல..

Summary:

 தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமான

 தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. அப்படத்தை தொடர்ந்து கார்த்தி பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி எனப் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர்  இறுதியாக தம்பி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்நிலையில் கார்த்தி தற்போது சுல்தான் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார்.  இந்த நிலையில் நடிகர் கார்த்தி சிறு வயதில் தனக்கு பிடித்த டிரஸ் குறித்தும், அவர் எந்த அளவிற்கு ரஜினியின்  ரசிகர் என்பதையும் நெகிழ்ச்சியுடன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதாவது நடிகர் கார்த்தி தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் , சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்த டிரஸ் டெனிம் ஜாக்கெட் மற்றும் பேண்ட் . எப்போதெல்லாம் ரஜினி சாரின் மை நேம் இஸ் பில்லா  பாடல் டிவியில் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த ட்ரெஸை போட்டுப்பேன்  என செம கியூட்டாக சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.
 


Advertisement