90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
அட.. நடிகர் கார்த்தியா இது? என்னாச்சு? இந்த வயசுலேயே இப்படி ஆகிட்டாரே! புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவக்குமாரின் மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பி ஆவார். அப்படத்தை தொடர்ந்து கார்த்தி பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி எனப் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் இறுதியாக தம்பி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் கார்த்தி தற்போது சுல்தான் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கார்த்தியின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் அந்த புகைப்படத்தில் நடிகர் கார்த்தி தல அஜித்தை போல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் இருந்துள்ளார். தலைமுடி நரைத்து போய் 42 வயதிலேயே, மிகவும் வயதான தோற்றத்தில் நடிகர் கார்த்தி இருப்பதை கண்ட ரசிகர்கள் இந்த கெட்டப் படத்திற்காகவா என கேள்வியெழுப்பி வருகின்றனர்.