தமிழகம் சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் கமலின் தற்போதைய நிலை என்ன?? சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட தகவல்..

Summary:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் கமலின் தற்போதைய நிலை என்ன?? சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட தகவல்..

கொரோனா பாதிப்பில் இருந்து நடிகர் கமல்ஹாசன் குணமாகிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் கமல்ஹாசன் கொரோனா உறுதியானதை அடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்தவாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவந்த நடிகர் கமல்ஹாசன் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமாகிவிட்டதாகவும், இருப்பினும் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை அவரை தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கமல் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்ட தகவல் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement