சினிமா

அதிர்ச்சி! இறந்த நடிகரின் சிலையில் இருந்து வடிந்த இரத்தம்! கடைசியில் நடந்த அதிசயம்!

Summary:

Actor kalapavan mani statue blood leak news goes viral

தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் ஜொலித்தவர் நடிகர் கலாபவன் மணி. விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஜெமினி திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் கலாபவன் மணி. அதன்பிறகு எண்ணற்ற படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கடைசியாக உலக நாயகன் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கலாபவன் மணி. அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு கலாபவன் மணி மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணையும் நடைபெற்றது.

https://cdn.tamilspark.com/media/18102jbm-kalabhavan-mani.jpg

இந்நிலையில் கடந்த ஆண்டு கலாபவன் மணி குடும்பத்தினரும் அவருடைய ரசிகர்களும் சேர்ந்து கலாபவன் மணிக்கு உருவ சிலை ஒன்றை அவரது சொந்த ஊரான சாலக்குடியில் வைத்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த சிலையில் இருந்து ரத்தம் வடிவதாக ஒரு தகவல் தீயாய் பரவியது.

ஆனால், அந்த சிலையை ஆராய்ச்சி செய்த போது அந்த சிலையில் இரும்பு ராடு ஒன்று துருப்பிடித்தன் காரணமாகவும் தற்போது அடிக்கும் வெயிலில் உள்ளிருக்கும் பைபர் வெப்பத்தால் துருவோடு சேர்ந்து வெளியே வரும்போது இரத்தக் கலரில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

https://cdn.tamilspark.com/media/18102jbm-maxresdefault.jpg


Advertisement