சினிமா

திடீரென 20 கிலோ எடை குறைவு ! முகம், தலை மாறியது..! எப்படி இருந்த ஜெயராம் இப்படி ஆகிவிட்டார்! இதுதான் காரணமா?

Summary:

Actor jayaram namo movie new look photos

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழமொழி படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜெயராம். கோகுலம் என்ற தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முறை மாமன், பஞ்ச தந்திரம், தெனாலி, துப்பாக்கி  போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ஜெயராம். மேலும், சான்ஸ்க்ரிட் மொழியில் நமோ என்ற படத்தில் நடித்துவருகிறார். நமோ படத்திற்காக 20 கிலோ வரை எடை குறைத்துள்ளாராம் நடிகர் ஜெயராம்.

அதுமட்டும் இல்லாமல், நமோ படத்திற்காக மொட்டை அடித்து, நடுவில் மட்டும் சிறிது முடி வைத்து பார்ப்பதற்கே மிக வித்தியாசமாக தோன்றுகிறார் ஜெயராம். அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஜெயராமுக்கு எதுவும் ஆகிவிட்டதா? இப்படி மாறிவிட்டார் என கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement