போயஸ் கார்டனில் குடியேறபோகும் ஜெயம் ரவி; அடேங்கப்பா இவ்ளோ தொகையா?

போயஸ் கார்டனில் குடியேறபோகும் ஜெயம் ரவி; அடேங்கப்பா இவ்ளோ தொகையா?


actor-jayam-ravi-new-house-in-poyas-carden

தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமானதின் மூலம் சம்பளம் பெறாமல் அதற்கு பதில் போயஸ் கார்டனில் 20 கோடி மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கியுள்ளார் ஜெயம் ரவி.

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படம் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் ரவி. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெறும் ரவியாக இருந்த இவர் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். 

கலவையான திரைப்படங்களில் நடித்துவந்த இவர் கடைசியாக அடங்க மறு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் ஓரளவுக்கு மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற முக்கிய பிரபலங்கள் மட்டுமே வசிக்கும் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இப்பகுதியில் சினிமா நட்சத்திரங்கள் வாடகைக்கு கூட வீடுகள் வாங்க முடியாது நிலையில் ஜெயம் ரவி வீடு வாங்கியுள்ளது பெரிதாக பேசப்படுகிறது. ஏனெனில் இப்பகுதியில் காலி மனை பட்டா எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் ஜெயம் ரவியை வைத்து வரிசையாக மூன்று படங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனம், இந்த 3 படங்களிலும் நடிக்க ஜெயம் ரவிக்கு சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லையாம். அதற்குப் பதிலாக போயஸ் கார்டனில்இருக்கும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 20 கோடி மதிப்புள்ள வீட்டை ஜெயம் ரவிக்கு எழுதி கொடுத்துள்ளார்களாம். இப்போது அந்தக் கம்பெனிக்கு வரிசையாக மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.