தமிழகம் சினிமா

பிரபல நடிகர் காரில் செல்லும்போது குடும்பத்துடுன் கிணற்றுக்குள் விழுந்தார்!. கிணற்றுக்குள் படமெடுத்த நாகப்பாம்பு!.

Summary:

actor fall down on well

சென்னையில் பாழடைந்த கிணற்றுக்குள் குடும்பத்தினருடன் விழுந்த நடிகர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் சினிமாவில் துணை நடிகராக நடித்துவருகிறார்.  இவர் ரஜினியின் 2 .0 படத்தில் எடிட்டராகவும் இருந்துள்ளார்.

இவர், இன்று அதிகாலை தனது மனைவி மற்றும் 4 வயது ஆண் குழந்தையுடன் காரில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமுள்ள ஆழமான கிணற்றில் விழுந்தது.

பாழடைந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் கார் விழுந்து நொறுங்கியது. நடிகர் சுந்தரமூர்த்தி, அவரின் மனைவி, குழந்தை ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.

1 மணிநேரத்திற்கு பின்னர், படுகாயமடைந்த மூவரையும் காவல்துறையினர் மீட்டனர். அவர்களை மீட்கும்போது நாகப்பாம்பு கிணற்றுக்குள் அவர்களை படமெடுத்து மறித்துள்ளது. பின்னர் அவர்களை பாம்பிடம் சிக்காமல் மீட்டுள்ளனர்.


 


Advertisement