"தமன்னாவுடன் ஆடாதிங்க" நடிகர் திலிப்பிற்கு எச்சரிக்கை செய்த மகள்..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் தமன்னா. 2005ஆம் ஆண்டு ஹிந்திப் படத்தில் தான் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து 2006ம் ஆண்டு "கேடி" என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 75 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர், சில விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் தமன்னா தற்போது முதல் முறையாக மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் திலீப் ஹீரோவாக நடிக்கும் "பாந்த்ரா" என்ற படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தை அருண்கோபி இயக்கியுள்ளார்.
வரும் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் திலீப், "பாந்த்ரா படத்தின் கதையை கேட்டபோது தமன்னா தான் இந்த படத்திற்கு தேவை என்று உணர்ந்தேன். அவரிடம் கேட்டதும் அவர் உடனே ஒப்புக்கொண்டார்.

தமன்னாவுடன் இப்படத்தில் எனக்கு ஒரு பாடல் காட்சி இருந்தது. அதுகுறித்து என் மகளிடம் கூறியபோது, "தமன்னாவுடன் ஆடப்போகிறீர்களா? அவருடன் இணைந்து நின்று ஆடி ரிஸ்க் எடுத்து உங்களை டேமேஜ் பண்ணிக்கொள்ள வேண்டாம் என்று என் மகள் கூறினார்" என்று திலீப் கலகலப்பாக பேசினார்.