சினிமா

தனுஷ் நடித்த ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்; வைரலாகும் ட்ரைலர், ரசிகர்கள் உற்சாகம்.!

Summary:

actor danush - hollywood movie - remack tamil - trailer

வடசென்னை, மாரி 2 படங்களை தொடர்ந்து அடுத்ததாக அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அசுரன் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடக்கி, வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தனுஷ் நடித்த ஆங்கில திரைப்படமான The Extraordinary Journey Of The Fakir’ என்ற படம் உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இப்படத்தை தமிழ் ரீமேக் செய்ய திட்டமிட்டனர். 'பக்கிரி' என்று பெயர் சூட்டப்பட்டு ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு முதலில் ‘வாழ்க்கையை தேடி நானும் போறேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தலைப்பு மாற்றப்பட்டு ‘பக்கிரி’ என்று வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ், மேஜிக்மேனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement