17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல்.. பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்.!



actor-daniel-losses-his-money

2013ஆம் ஆண்டு வெளியான "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் டேனியல். முன்னதாக இவர் பொல்லாதவன், பையா, ரௌத்திரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து மாசு என்கிற மாசிலாமணி, ரங்கூன், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Bigbosa

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவர் பேசிய "பிரெண்டு லவ் மேட்டர். பீல் ஆயிட்டாப்ல, ஒரு ஹாப் அடிச்சா கூல் ஆயிடுவாப்ல" என்ற வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2வில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.

அதன்பின்னர் தனது காதலியைக் கரம் பிடித்த டேனியல் சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில், "நோ புரோக்கர் ஆப் மூலம் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்த போது, ​​எஸ் டி எஸ் கே பிராப் டெக் என்ற நிறுவனம் என்னைத் தொடர்பு கொண்டு 17 லட்சம் ரூபாய் கொடுத்தால் லீசுக்கு வீடு பார்த்து தருவதாகக் கூறினார்.

Bigbosa

மாத வாடகையை தாங்கள் செலுத்திவிடுவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகையை திரும்ப செலுத்துவதாகவும் கூறி போரூரில் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டனர். ஆனால் 3 மாதத்திற்கு பிறகு வீட்டு உரிமையாளர் வாடகைக்கு வரவில்லை என்று கூறியதன் மூலம் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன் " என்று டேனியல் கூறியுள்ளார்.