அடேங்கப்பா.. இலவச மருத்துவமனை கட்டுவதாக அறிவிப்பை வெளியிட்ட பிரபல முன்னணி நடிகர்.. பாராட்டிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..!!

அடேங்கப்பா.. இலவச மருத்துவமனை கட்டுவதாக அறிவிப்பை வெளியிட்ட பிரபல முன்னணி நடிகர்.. பாராட்டிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..!!


actor chiranjeevi birthday special

தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. நேற்று இவரது 67-வது பிறந்த நாளை முன்னிட்டு சினிமா, அரசியல், விளையாட்டு நிபுணர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடிகர் சிரஞ்சீவி பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், "தெலுங்கு திரைப்பட நடிகர் மெகா ஸ்டார் திரு.சிரஞ்சீவி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்காக சிரஞ்சீவி புதிய மருத்துவமனை கட்டப்போவதாக அறிவித்துள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. 

actor chiranjeevi

மேலும் ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவுள்ளது என அறிவித்துள்ள சகோதரர் சிரஞ்சீவி அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்படத்துறையில் ஏழை தொழிலாளர்களின் நலனுக்காக மற்ற நடிகர்களும் சகோதரர் சிரஞ்சீவியை பின்பற்ற வேண்டும்" என்று தமிழிசை சௌந்தர்ராஜன் பதிவிட்டுள்ளார்.