கழிவறையில் இறந்து கிடந்த பிரபல விஜய், தனுஷ் பட நடிகர்! வருத்தத்துடன் ரசிகர்கள் இரங்கல்!!

கழிவறையில் இறந்து கிடந்த பிரபல விஜய், தனுஷ் பட நடிகர்! வருத்தத்துடன் ரசிகர்கள் இரங்கல்!!


Actor chelladurai dead by heart attack

பிரபல மூத்த குணசித்ர நடிகரான செல்லத்துரை ஐயா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி மற்றும் தனுஷின் மாரி 2 ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை போன்ற பல திரைப்படங்களில் சிறு சிறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகர் செல்லத்துரை.

84 வயது நிறைந்த அவர், அவரது வீட்டில் கழிப்பறையில் சுய நினைவு இன்றி மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

Chelladurai

இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அவருடைய இறுதிச் சடங்கு இன்று பிற்பகம் 2 மணிக்கு  நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் செல்லத்துரையின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து தமிழ் திரைப்பட பிரபலங்கள் உயிரிழப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.