நடிகர் பாபி சிம்கவின் அழகான மனைவி மற்றும் குழந்தையை பாத்துருக்கீங்களா? புகைப்படம்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

நடிகர் பாபி சிம்கவின் அழகான மனைவி மற்றும் குழந்தையை பாத்துருக்கீங்களா? புகைப்படம்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்ற அளவிற்கு வளர்ந்துவிட்டார் நடிகர் பாபி சிம்கா. சித்தார்த், அமலாபால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சூது கவ்வும் திரைப்படம் மூலம் பிரபலமானார்.

அதன்பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்ஸா படத்திலும் நடித்திருந்தார் பாபி சிம்கா. ஜிகர்தண்டா படத்தில் நடித்ததற்காக தேசிய விருதினை பெற்றார் நடிகர் பாபி சிம்கா. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகை ரேஷ்மி மேனனை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் பாபி சிம்கா. இவர்களுக்கு முத்ரா என்ற அழகான பெண் குழந்தை ஓன்று உள்ளது. ரேஷ்மி மேனன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கிருமி, உறுமீன் போன்ற படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo