பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்.! அவருக்கா இப்படியொரு துயரம்?? பேரதிர்ச்சியில் திரையுலகம்!!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்.! அவருக்கா இப்படியொரு துயரம்?? பேரதிர்ச்சியில் திரையுலகம்!!


actor-bharath-kalyan-wife-dead-suddenly

கன்னட திரையுலகில் சில படங்களில் நடித்து முக்கியமான நடிகராக வலம் வந்தவர் பாரத் கல்யாண். இவர் தமிழில் ஜென்டில்மேன், ஆதிலட்சுமி புராணம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அவர் பல பிரபல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.

அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரிலும், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜமிலா சீரியலில் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். பாரத் கல்யாண் மனைவி பிரியதர்ஷினி. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்.

bharathi kannamma

பிரியதர்ஷினி சில வாரங்களுக்கு முன்புதான் பாரத் கல்யாண் நடிக்கும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு குடும்பத்தினருடன் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். பிரியா கடந்த சில மாதங்களாகவே சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு டயாபடிக் அதிகமாகி உடல்நிலை மோசமானதால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்ததாகவும், கொஞ்சநாள் கோமாவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளாராம். இதனால் அவரது குடும்பத்தினர்கள் மீள முடியா சோகத்தில் உள்ளனர். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்