சினிமா

இது என்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை... சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Summary:

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி கோரத்தாண்டவமாடுகி

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி கோரத்தாண்டவமாடுகிறது. மேலும் ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நிரம்பி வழிகின்றனர். அதுமட்டுமின்றி இந்த கொடூர தொற்றுக்கு சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் உயிரிழக்கும் அவலமும் நேரிடுகிறது.

அது ஒருபுறமிருக்க கொரோனாவால், மாரடைப்பால் இளம் வயதினரும் இறக்கும் துயரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் திரையுலகிலும் அடுத்த அடுத்ததாக தொடரும் மரணங்கள் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரது மரணம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பவுன்ராஜ் ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழத்தைப் பறிக்க முயன்று  டீ ஸ்டாலையையே கவிழ்த்த காட்சி ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டது.


Advertisement