என்னது.. சந்திரமுகி படத்தில் நடித்த இந்த நடிகரோட மனைவி இவர்தானா! யாருனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!!



Actor Avinash with wife photo viral

தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அவினாஷ். இவர் 1986 ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், பெரும்பாலும் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இவர் சந்திரமுகி படத்தில் ராமச்சந்திரா ஆச்சாரியாவாக நடித்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றார். இவரது மனைவி மாளவிகா. இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மாளவிகா ஜேஜே படத்தில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர் சில திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் துணைக் கதாபாத்திரங்களிலும்  நடித்துள்ளார்.

Avinash

மாளவிகா கேஜிஎஃப் படத்தில் தீபா எனும் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த ஜோடி குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.