எப்படி இருந்த ஆர்யா இப்படி மாறியுள்ளார் பாருங்கள்.! 7 மாதங்களில் நடந்த அதிசயம்.! வைரல் புகைப்படம்.!

எப்படி இருந்த ஆர்யா இப்படி மாறியுள்ளார் பாருங்கள்.! 7 மாதங்களில் நடந்த அதிசயம்.! வைரல் புகைப்படம்.!


Actor arya transformation in last 7 months image goes viral

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் பாக்சிங்கை மையமாக கொண்ட புது படம் ஒன்றில் நடிக்கின்றார் நடிகர் ஆர்யா. 1970-காலகட்டங்களில் நடந்த குத்துச் சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு சல்பேட்டா என பெயரிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்திற்காக ஆர்யா தனது முழு உடலையும் முற்றிலும் மாற்றி இருப்பது சினிமா பிரபலங்கள் உட்பட அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை உருவாகியுள்ளது. இதற்காக தான் பட்ட கஷ்டங்கள், தற்போதைய தோற்றம் இவற்றை ஆர்யா சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், 7 மாதங்களுக்கு முன் தான் எப்படி இருந்ததாகவும், தற்போது எப்படி இருப்பதாகவும் ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்யா. 7 மாதங்களாக நடந்த தீவிர உடற்பயிற்சி, பாக்ஸிங் மூலம் தனது உடல் இவ்வாறு மாறியிருப்பதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.