தமிழகம் சினிமா

செவுளிலேயே அறையனும்.. கண்கலங்கியவாறு ஆதங்கத்துடன் பிரபல சன் டிவி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ! ஏன், என்ன நடந்தது?

Summary:

சன் தொலைக்காட்சியில் கல்யாணப்பரிசு, அழகி, வாணி ராணி, சந்திரலேகா, பூவே உனக்காக என ஏராளமான ச

சன் தொலைக்காட்சியில் கல்யாணப்பரிசு, அழகி, வாணி ராணி, சந்திரலேகா, பூவே உனக்காக என ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் குமார் ராஜன். அவர் தற்போது பூதாகரமாக வெடித்து வரும் சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தை குறித்து ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ஆசிரியர் ராஜகோபாலனின் பெயரை சொல்லவே கூச்சமாகவும், அசிங்கமாகவும் உள்ளது. அவனை நினைக்கும் போது வாயில் வண்டை வண்டையாக வருகிறது. இப்படிப்பட்ட பள்ளிகளில்  அட்மிஷன் கிடைப்பது கஷ்டம் என நினைத்து, பலரிடம் சிபாரிசு பெற்று பள்ளிகளில் சேர்க்க பலரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஐந்து வருடமாக ஒரு ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் இவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கிறது.

அவனை அழைத்து செவுளில் அறைந்தால், வேறு யாரும் இப்படிப்பட்ட வேலையை செய்ய பயப்படுவார்கள் அல்லவா? இவர்களுக்கு தக்க தண்டனையை கொடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மாணவிகளின் வாழ்க்கையே திசை மாற்றிவிடும். பள்ளிகளில் மாணவர்கள் சிறு தவறு செய்தால் கூட பெற்றோர்களை அழைத்து விசாரிக்கிறார்கள் ஆனால் இவ்வாறு பெரிய தவறு செய்யும்போது விசாரித்து நடவடிக்கை எடுக்க மட்டும் ஏன் தாமதமாகிறது.இது போன்ற பாலியல் அத்துமீறல்களை பள்ளி நிர்வாகத்தால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ஏன் இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டும் என ஆவேசமாக பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இவ்வாறு கண்கலங்கியவாறு அவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் தற்போது  வைரலாகி வருகிறது.


Advertisement