சினிமா

தல பட்டம் வேண்டாம் - நடிகர் அஜித் பரபரப்பு அறிவிப்பு.!

Summary:

தல பட்டம் வேண்டாம் - நடிகர் அஜித் பரபரப்பு அறிவிப்பு.!

தன்னை தல என்று பட்டம் வைத்து அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித் குமார். இவரை ரசிகர்கள் தல என்றும் அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில், நடிகர் அஜித் குமார் தன்னை பற்றி பேசுவார்கள், எழுதுபவர்கள் தல என குறிப்பிட வேண்டாம் என அஜித்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார். 

இதுகுறித்து, நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில், "பெரும்‌ மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும்‌ என்‌ உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும்‌ காலங்களில்‌ என்னை பற்றி எழுதும்‌ போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்‌ போதோ என்‌ இயற்‌ பெயரான அஜித்‌ குமார்‌ , மற்றும்‌ அஜித்‌ என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால்‌ போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம்‌ என்று அன்போடு வேண்டுகோள்‌ விடுக்கிறேன்‌. உங்கள்‌ அனைவரின்‌ ஆரோக்கியம்‌, உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும்‌ கிடைக்க வாழ்த்துகிறேன்‌. அன்புடன்‌, அஜித்குமார்‌" என தெரிவிக்கப்பட்டுள்ளது..


Advertisement