நாடாளுமன்ற தேர்தலில் போட்டி போட போகிறதா விஜய் மக்கள் இயக்கம்.. கேள்விக்கு பதிலளித்த மக்கள் இயக்க பொதுச்செயலாளர்.!



Acter vijay political entry

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் காலூன்று நிற்கிறார்.

vijay

தனது நடிப்பு திறமையின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் விஜய், இளைய தளபதி எனும் பெயர் பெற்று இருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக 'லியோ' திரைப்படத்தில் வருகிறார்.

இப்படத்தில் பல முக்கிய பிரபல நடிகர்கள் நடித்து வரும் நிலையில், 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவு செய்யப்பட்டு திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே விஜயின் செயல்பாடுகள் அரசியலில் ஈடுபட போகிறாரா என்று கேள்வியை எழுப்பி வருகிறது.

vijay

சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் குழுவினருடன் விஜய் சந்தித்து பல மணி நேரம் பேசி இருக்கிறார். இதன் பிறகு விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர், பத்திரிகையாளர்களிடம் பேசிய போது "நாடாளுமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடப் போகிறதா என்ற கேள்விக்கு? கையெடுத்து கும்பிட்டு ஆளை விடுங்கப்பா என்று கூறியிருக்கிறார். மேலும், வரும் வருமானத்தில் முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் அரசியல் வேண்டாம் என்று மட்டும் விஜய் கூறியிருப்பதாக தெரியவந்திருக்கிறது.