"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
மிகவும் ஆக்ரோஷமாக பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட வீடியோ!! இந்த உச்சகட்ட வெறுப்பிற்கு காரணம் இதுதானா?
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே வீட்டில் பல பிரச்சினை வெடித்தது. சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது.இதற்கிடையில் தற்கொலை முயற்சி செய்ததாக மதுமிதா வெளியேற்றப்பட்டார். மேலும் குறைந்த வாக்குகளை பெற்று அபிராமி வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதுமே அழுதுகொண்டே இருக்கும் அபிராமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிற போட்டியாளர்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது மிகவும் ஆக்ரோஷமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் மதுமிதா குறித்து பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது என்றும், அது தான் இல்லை தன்னை போலவே யாரோ குரல் மாற்றி பேசியுள்ளனர். இதுபோன்ற செயல்கள் மிகவும் வெறுப்பாக உள்ளது என அபிராமி கூறியுள்ளார் மேலும் நேர்காணல்கள் கொடுக்க வேண்டும் என்றால் நானே நேரடியாக கொடுப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.