சினிமா

இம்முறையாவது நிரூபிப்பாரா?? பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக்பாஸ் சீசன் 5 பிரபலம்! யார்னு பார்த்தீங்களா!!

Summary:

இம்முறையாவது நிரூபிப்பாரா?? பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக்பாஸ் 5 பிரபலம்! யார்னு பார்த்தீங்களா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. அதில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்று 50 லட்சத்தை தட்டி சென்றார். இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சி ஓடிடியில் தொடங்கப்படவுள்ளது.

நடிகர் கமலே தொகுத்து வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதனை உலக நாயகன் கமல் பிக்பாஸ் சீசன் 5 பினாலே மேடையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஓவியா, ஜுலி, யாஷிகா ஆனந்த்  ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 5 வில் கலந்து கொண்டவரும், பிரபல பழம்பெரும் நட்சத்திரங்கள் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனுமான அபினய்யும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அதில் நாடகக் கலைஞரான தாமரையும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

 


Advertisement