சினிமா

அடக்கொடுமையே.! முதன்முதலாக தனது காதலை ஆர்யா இவர்கிட்டயா சொன்னாரு!! அவரே கூறிய ஷாக் தகவல்!

Summary:

aarya said his love secret

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் தமிழ் சினிமாவின் பிளே பாய், ரொமான்டிக் நடிகர் என பேசப்படுபவர் .நடிகர் ஆர்யா பூஜா, நயன்தாரா, நஸ்ரியா என பல நடிகைகளுடன் சேர்த்து  கிசுகிசுக்கப்பட்டார்.

பின்னர் ஆர்யாவுக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு  பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது. ஆனால் அவர் அதில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவரைக்கூட  திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் ஆர்யா  தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த சாயிஷாவை காதலித்து வந்துள்ளார். பின்னர்  இருகுடும்பத்தாரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் 10 ம் தேதி அவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்று சென்னையில் வரவேற்பு விழா நடைபெற்றது.

aarya sayeesha க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து  டெடி என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் இணைந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவான காப்பான் படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் காப்பான் பட விழா நடைபெற்றுள்ளது. அதில் சாயிஷாவுடன் நடிகர் ஆர்யா கலந்துகொண்டுள்ளார். அப்பொழுது பேசிய ஆர்யா தனது காதல் ரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

தொடர்புடைய படம்

அப்பொழுது ஆர்யா கூறுகையில், நான் எனது காதலை சாயிஷாவிடம் முதலில் சொல்லவில்லை. ஏனெனில் நான் ஏற்கனவே பல பெண்களிடம் நேரடியாக எனது காதலைச் சொல்லி அது தவறாக போயுள்ளது. அதனால் நான் சாயிஷாவை காதலிப்பதை முதன் முதலில் அவரது அம்மாவிடம்தான் கூறினேன் என கூறியுள்ளார்.


 


Advertisement