சினிமா

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு! என்ன கொடுமைடா இது! வச்சு செய்த நடிகை ஆர்த்தி! இதுதான் காரணமா?

Summary:

aarthi tweet about converting as christian

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி. அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

 மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்த சில செயல்கள் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அதற்குப்பின் அவர் முறையான விளக்கமும் அளித்தார். இந்நிலையில் சமீபத்தில் பிகில் திரைப்படத்தின் வசூல் சாதனையால் நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது.

harathiக்கான பட முடிவுகள்

இதற்கிடையில் அவர் மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அதுமட்டுமின்றி ஏராளமான நடிகர்களை மதம்மாற்ற முயற்சி செய்வதாகவும், விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ்கண்ணா மற்றும் ஆர்த்தி ஆகியோர் வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர் எனவும் பதிவு ஒன்று வைரலானது. 

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என அந்த பதிவை கிண்டல் செய்து பதில் அளித்துள்ளார்.


Advertisement