சினிமா வீடியோ

சத்தமா சிரிச்சுடுங்க.. வாத்தி கம்மிங் பாடலுக்கு கணவருடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஆர்த்தி! வைரலாகும் வீடியோ!

Summary:

Aarthi dance with husband for master song

தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக் போன்ற பல முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில், காமெடி காட்சிகளில் நடித்து கலக்கியவர் நடிகை ஆர்த்தி கணேஷ். 

அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்த சில செயல்கள் ரசிகர்கள் மத்தியில் பல சர்ச்சையையும் கிளப்பியது.

இந்நிலையில் தற்போது கொரோனா கோரதாண்டவம் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வீட்டில் முடங்கியிருக்கும் ஆர்த்தி தனது கணவருடன் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டு, சத்தமா சிரிச்சுடுங்க Come-on போர் அடிக்கிறவங்க கலாய்கலாம் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். 

 


Advertisement