மணமேடையில் மணப்பெண் தோழிக்கு தாலிகட்டி மணமகன்.. அதிர்ந்துபோன உறவினர்கள்.!

மணமேடையில் மணப்பெண் தோழிக்கு தாலிகட்டி மணமகன்.. அதிர்ந்துபோன உறவினர்கள்.!


a Television Serial Marriage Shoot Video Leaked Social Media Groom Change Bride

சமூக வலைத்தளத்தில் வைரலான திருமண மணப்பெண்ணை மாற்றிய மணமகன் தொடர்பான வீடியோ தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பு நாடகம் என்பது தெரியவந்துள்ளது.

திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று கூறுவார்கள். அந்த திருமணத்தில் பல மறக்க முடியாத இன்பமும், வலிகளும் நிறைந்திருக்கும். வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்கு செல்ல திருமணம் பேருதவி செய்கிறது. இன்றளவில் நடக்கும் திருமணங்கள் பல வினோத சர்ச்சைகளில் முடிந்து வருகிறது. 

அந்த வகையில், கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அந்த வீடியோவில், திருமண ஜோடிகள் திருமணம் செய்ய தயாராகிய நிலையில், மணமகன் மணப்பெண் தோழிக்கு திடீரென தாலியை கட்டுகிறார். 

இதனைக்கண்டு குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக, உறவினர்கள் அனைவரும் கோஷம்போடுவது போல் வீடியோ இருந்தது. இந்த வீடியோ பெரும் வைரலாகிவிடவே, மணப்பெண்ணை மணமேடையில் வைத்து மணமகன் மாற்றிவிட்டதாக கூறப்பட்டது. 

ஆனால், வீடியோ குறித்து விசாரிக்கையில் அது சின்னத்திரை தொடர் படப்பிடப்பிப்பு என்பது உறுதியானது. மேலும், வீடியோவை நன்றாக கவனித்தால், மணமகன் மணப்பெண்ணை மாற்றும் போது, அங்கிருந்த ஆண் ஒருவர் நெஞ்சில் கைவைப்பதற்கு பதிலாக, நுரையீரல் பகுதியில் மாற்றி கைவைத்துவிடுவார். 

உண்மையில் அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், நெஞ்சு வலி ஏற்பட்டு நெஞ்சில் தான் கைவைத்திருப்பார்கள். ஆனால், அதிர்ச்சியில் நுரையீரலில் வலி வரும் என்பது நாடகத்தில் தான் நடக்கிறது.