90's கிட்ஸ் பேவரைட் மர்மதேசம் நடிகர் தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!!

90's கிட்ஸ் பேவரைட் மர்மதேசம் நடிகர் தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!!



90 Kids Favorite Marmadesam Actor Suicide

குழந்தை நட்சத்திரங்களுக்கு விருப்பமான பிரபல நடிகர் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழில் கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் வெளியான மர்மதேசம், ஜீபூம்பா போன்ற தொடர்களில் இளம் வயது ராஜேந்திரன் உட்பட பல கதாபாத்திரங்களில் நடித்தவர் லோகேஷ். இவர் மர்மதேசம் தொடரின் இயக்குனரின் மீது மிகுந்த மரியாதை கொண்டதால், நடிப்பை விட்டுவிட்டு தற்போது இயக்குனராகும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் இவரது இயக்கத்தில் குறும்படங்கள் வெளியான நிலையில், தற்போது பெரிய திரையில் படம் ஒன்றை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாகதான் மர்மதேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகளான மகிழ்ச்சியை அனைவரும் பரிமாறி கொண்டனர். 

marmadesam

அப்போது லோகேஷும் கலந்து கொண்டார். இந்நிலையில் சென்னையில் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இவரது இந்த உயிரிழப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மர்மதேசம் தொடரில் உள்ளவர்களும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.