சினிமா

7G ரெயின்போ காலனி நடிகர் ரவி கிருஷ்ணாவின் தற்போதைய நிலை! புகைப்படம் உள்ளே!

Summary:

7G Rainbow colony movie actor ravi krishna current status

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 7G ரெயின்போ காலனி. படம் வெற்றிபெற்றதோடு பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. இந்த படத்தில் ஹீரோவாகா ரவி கிருஷ்ணா நடித்திருந்தார். இதுதான் அவருக்கு முதல் படம்.

படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதோடு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதும் இவருக்கு கிடைத்தது. படத்தில் ரவி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகை சோனியா அகர்வால் நடித்திருந்தார். இவரும் தனது நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

இந்நிலையில் 7G ரெயின்போ காலனி படம் வெளியாகி சுமார் 15 வருடங்கள் ஆன நிலையில் சோனியா அகர்வால் தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாமல் ஒருசில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துவருகிறார். ஆனால், படத்தின் நாயகன் ரவி கிருஷ்ணா என்ன ஆனார்? தற்போது என்ன செய்கிறார் என எந்த ஒரு செய்திகளும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு 7G ரெயின்போ காலனி படத்தின் நடிகர் ரவி கிருஷ்ணாவும், நாயகி சோனியா அகர்வாலும் சந்தித்துள்ளனனர். அது சம்மந்தமான புகைப்படம் ஓன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement