சினிமா

காற்றில் பறக்கும் செல்போன்கள்!! ரஜினியின் 2.0 டீஸர் சொல்லும் கதை என்ன?

Summary:

2.0 teaser story telliing

விநாயகர் சதுர்த்தியான இன்று 2.0 படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 2D மற்றும் 3D வடிவில் வெளியாகியுள்ள இந்த டீஸர் பல்வேறு திரையரங்குளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை சரியாக 9 மணியளவில் வெளியான இந்த டீசரை ரசிகர்கள் திரையரங்குகள் மற்றும் இணையதளத்தில் கண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த டீஸர் மூலம் இந்த படத்தின் கதை எதனை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. அதனை பற்றி பாப்போம்:

தொடர்புடைய படம்

டீசரின் ஆரம்பத்தில், காரில் செல்போனில் ஒருவர் பேசிக்கொண்டு செல்லும்போது, அந்த போன் தானாக காற்றில் பறந்து செல்கிறது. அதனை தொடர்ந்து அனைவரின் செல்போன்களும் காற்றில் பறக்கின்றன. இதன் மூலம் இந்த படம் செல்போன்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

மேலும் பறந்து செல்லும் செல்போன்கள் ஒன்றாக சேர்ந்து கழுகு போன்ற உருவம் உருவாகிறது. இந்த உருவம் நகரத்தில் பல்வேறு சேதாரங்களை ஏற்படுத்தி வருகிறது. இது கண்டிப்பாக இந்த படத்தின் வில்லனாக இருக்கும் அக்‌ஷய்குமாரின் வேலையாக தான் இருக்க வேண்டும்.

2.0 teaser க்கான பட முடிவு

செல்போன்களால் உருவான அந்த கழுகு உருவம் செய்யும் நாச வேலைகளை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது அரசாங்கம். அப்போது நடக்கும் சந்திப்பில் ஒரு ஆராய்ச்சியாளராக கலந்து கொண்டிருக்கும் கதாநாயகன் ரஜினி தனது தாயாரிப்பான சிட்டி ரோபோவாள் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகிறார். அந்த சந்திப்பில் ரஜினிக்கு அருகிலே எமி ஜாக்சனும் அமர்ந்திருப்பதால் அவரும் ரஜினியுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவார் என்பது தெரிகிறது.

அதன்படி சிட்டி ரோபோவாக களத்தில் இறக்குகிறார் ரஜினி. அந்த கழுகு ரோபோவை வைத்து வில்லன் செய்யும் அட்டகாசங்களை எப்படியெல்லாம் சிட்டி ரோபோ தடுக்கிறது என்பது தான் இரண்டாம் பாகத்தில் இருக்குமென்று தெரிகிறது.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஒரு கால்பந்து மைதானத்தில்எடுக்கப்பட்டுள்ளது. எந்திரன் படத்தில் கடைசியில் ஒரே மாதிரி பல சிட்டி ரோபோக்களை உருவாகியதை போன்றே இந்த படத்திலும் கடைசியில் பல கழுகு உருவம் கொண்ட ரோபோக்களை உருவாக்கியுள்ளார் இயக்குனர். 

chitti with gun in enthiran க்கான பட முடிவு

எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ ஒரே நேரத்தில் பல்வேறு துப்பாக்கிகளை கொண்டு சுடும் காட்சி இந்த படத்திலும் இடம் பெற்றுள்ளது.

ஒரு வழியாக எப்படியும் வில்லனை அழிப்பது தான் முடிவாக இருக்கும். அதனை எப்படி அழிக்கிறார் என்பதை படம் வெளியான பிறகு பாப்போம்.


Advertisement