
1 year Baby dead in one bucket of water
திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு அருண் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தினமும் குழந்தை அருணை முருகன் வாளியில் வைத்து குளிப்பாட்டுவது வழக்கமாக கொண்டிருந்தார்.
அவ்வாறு முருகன் நேற்றும், முழுவதும் நீர் நிரம்பிய வாளி அருகே குளிப்பதற்காக குழந்தை அருணை தூக்கி சென்றுள்ளார். அப்பொழுது முருகனுக்கு போன் கால் வந்துள்ளது. இந்நிலையில் அவர் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.
அப்பொழுது வாளி நீரில் இறங்கிய குழந்தை நீரில் மூழ்கி உயிருக்குப் போராடியுள்ளான். இந்நிலையில் திடீரென குழந்தை ஞாபகம் வந்த முருகன் அருணை அழைத்துள்ளார். இப்பொழுது அருணின் எந்தச் சத்தமும் வராத நிலையில் பதறியடித்து ஓடிய முருகன் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கிச் சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
Advertisement