இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளுக்கு எரிச்சல் - வேதாந்தா தலைவர் பரபரப்பு பேச்சு.! 



vedanta-chairman-anil-agarwal-says-global-markets-resis

வேலைவாய்ப்பும், பொருளாதார வலிமையும் உள்நாட்டு உற்பத்தியால் மட்டுமே சாத்தியம் என வேதாந்தா தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையை தளரவிடக்கூடாது:

புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி குறித்து முக்கிய கருத்துகளை முன்வைத்தார். இந்தியா உற்பத்தி செய்யும் பொருட்களை உலக நாடுகள் விரும்பி ஏற்றுக்கொள்ளாத நிலை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதனால் உள்நாட்டு உற்பத்தியை புறக்கணிக்கக் கூடாது எனத் தெரிவித்தார். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரே வழி உள்நாட்டு உற்பத்திதான் என்பதை உலகின் பல நாடுகள் நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: திமுக வை கடுமையாக தண்டிக்கனும்! எந்த தொகுதியிலும் வெற்றி பெற கூடாது! இதுதான் எங்களது நோக்கம்! திமுகவுக்கு இந்த தேர்தல்ல பொங்கல் வைக்கணும்! ஹெச்.ராஜாவின் அதிரடி பேச்சு!

மக்கள் இயக்கத்தால் சாதித்த இந்தியா:

இந்தியாவின் உற்பத்தித் துறையில் முன்னேற்றத்தைத் தடுக்க முயலும் சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் இருப்பதாக அனில் அகர்வால் வலியுறுத்தினார். ஒரு காலத்தில் உணவுப் பாதுகாப்புக்காக முழுமையாக இறக்குமதியை நம்பியிருந்த இந்தியா, இன்று தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளதாக நினைவூட்டினார். இது அரசாங்கம் உருவாக்கிய மக்கள் இயக்கத்தின் விளைவாகவே சாத்தியமானது என்றும் அவர் கூறினார்.

business

எரிவாயு உற்பத்தி அதிகரிக்க வேண்டும்:

அதேபோன்று, தற்போதைய நிலையில் இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவைகளில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதியையே நம்பி இருப்பது, நாட்டை பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் தள்ளியுள்ளது என அவர் எச்சரித்தார். இந்த நிலை நீடித்தால், நீண்டகாலத்தில் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற கவலையையும் அவர் வெளிப்படுத்தினார்.

நம்மிடம் உள்ளது:

இந்த சூழ்நிலையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதைத் தவிர வேறு மாற்று வழி இல்லை என்றும், இந்தியாவிடம் அதற்குத் தேவையான அனைத்து வளங்களும் இருப்பதாகவும் அனில் அகர்வால் தெரிவித்தார். இயற்கை வளங்கள், திறமையான தொழில் முனைவோர் மற்றும் மனித வளம் ஆகியவை இந்தியாவுக்கு போதுமான அளவில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வலியுறுத்தல்:

ஆனால், இந்த திறன்களை முழுமையாக பயன்படுத்த விரிவான ஆய்வுகள், தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் நீண்டகால திட்டமிடல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாடல் மட்டுமே இந்தியாவை பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்ற வலிமையான நாடாக மாற்றும் என அனில் அகர்வால் தனது உரையை முடித்தார்.

இதையும் படிங்க: Rahul Gandhi: இந்தியாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்த மோடி - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.!