BREAKING: ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ...!!!



May14- gold-price-rises-again-in-tamilnadu

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாற்றம் காணப்பட்டு வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்வு கண்டுள்ளது. நேற்று திடீரென குறைந்த விலை நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்று நிம்மதி அளித்திருந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் பதிவாகியுள்ளது.

இன்றைய சந்தை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.15,050 ஆக விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரலாறு காணாத உச்சம்! தங்க விலை ஒரு சவரனுக்கு ரூ.1360 உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ஒரே நாளில் மாற்றமான நிலை

நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.3,200 வரை குறைந்து ரூ.1,20,000-க்கு விற்பனையான தங்கம், இன்று மீண்டும் உயர்ந்ததால் நகை விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் விலை நிலவரத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி விலையில் சற்று சரிவு

தங்கம் உயர்ந்திருந்தாலும், வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.315 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,15,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நடுத்தர குடும்பங்கள் கவலை

தொடர்ச்சியாக மாறி வரும் தங்க விலை காரணமாக திருமணம் மற்றும் விழாக்கால நகை வாங்க திட்டமிட்டிருந்த இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் சற்று யோசனையில் உள்ளனர். வரும் நாட்களில் விலை மேலும் உயருமா என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் நிலவி வருகிறது.

 

இதையும் படிங்க: தங்கம் விலை மீண்டும் உயர்வு! சவரனுக்கு ரூ. 640 அதிகரித்தது..... இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ!