தங்கம் விலை மீண்டும் உயர்வு! சவரனுக்கு ரூ. 640 அதிகரித்தது..... இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ!
சென்னையில் ஆபரண சந்தையில் இன்று வார தொடக்கமே மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் விலை மாற்றம் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, திடீரென உயர்வு கண்டதால் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
தங்கம் விலை திடீர் உயர்வு
இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 வரை அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.1,01,440 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சமீப நாட்களில் ஏற்பட்ட விலை சரிவை தொடர்ந்து இந்த உயர்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் நிலவரம்
அதேபோல் 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.13,833 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,10,664 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இனி கனவுல தான் தங்கம்....தாறு மாறாக உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ....!
வெள்ளி விலையும் உயர்வு
தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையிலும் உயர்வு பதிவாகியுள்ளது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த திடீர் உயர்வு, வரும் நாட்களில் சந்தையில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகை வாங்க திட்டமிடுபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விலை போக்கை கவனமாக கண்காணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1600 உயர்வு!
