BREAKING : உச்சக்கட்ட அதிர்ச்சி! தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்வு! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ...!



gold-silver-price-hike-in-india-latest-update

சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் பதற்றத்தால் முதலீட்டு சந்தை தொடர்ந்து அதிர்வுகளை சந்தித்து வருகிறது. பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் மக்கள் திரண்டு முதலீடு செய்வதால் விலை தொடர்ந்து ஏற்றம் காண்கிறது.

சர்வதேச நிகழ்வுகள் தாக்கம்

ரஷ்யா–உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களால் உலக பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதன் விளைவாக தங்கம் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்.....

சவரன் தங்கம் மீண்டும் உயர்வு

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று சவரனுக்கு ரூ.880 குறைந்திருந்த விலை, இன்று காலை மீண்டும் உயர்ந்துள்ளது. ரூ.200 உயர்வுடன் ஒரு கிராம் ரூ.11,720க்கு விற்கப்படுகின்றது.

சவரனுக்கு ரூ.1,600 உயர்வு

தங்க விலை உயர்வின் தாக்கமாக சவரன் விலை இன்று ரூ.1,600 உயர்ந்து ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை திடீரென உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

வெள்ளி விலையும் ஏற்றம்

தங்கத்துடன் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.3 உயர்ந்து ரூ.174ஆகவும், ஒரு கிலோ ரூ.1,74,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சந்தை முழுவதும் விலை ஏற்றம் தொடரும் என வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

உலக பொருளாதாரத்தில் நிலவும் இந்த  சூழல் மேலும் நீடித்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிக ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 

இதையும் படிங்க: BREAKING: மக்கள் நிம்மதி... தங்கம் விலை சற்று குறைவு! இன்றைய தங்கம் நிலவரம் இதோ....!