புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஆசிய கோப்பை: சுழற்றிவிட்ட ஜடேஜா; சுழற்றியடித்த ரோஹித் சர்மா; தெறித்து ஓடியது வங்கதேசம்!!
ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்று வரும் 14 வது ஆசியா கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் இரண்டு ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா அணி வங்கதேச அணியுடனும் இன்று மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியுடனும் மோதின.
இதன் முதலாவது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேசத்தின் முன்னணி வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே சரிய ஆரம்பித்தனர்.
இதனால் வங்காளதேசம் அணி ஒரு கட்டத்தில் 101 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மோர்டசாவும், மெஹிதி ஹசனும் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடியால் வங்காளதேசம் அணி 170 ரன்களை கடந்தது.
இறுதியில், வங்காளதேசம் அணி 49.1 ஓவரில் 173 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 42 ரன்களும், மோர்டசா 26 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் ஓராண்டிற்கு பின்னர் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜடேஜா அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்தனர். 15வது ஓவரில் சாகிப் வீசிய பந்தில் ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு 13 ரன்களில் வெளியேற இந்தியா 106 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பின்னர் களமிறங்கிய தோனி தனது வழக்கமான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தொடங்கினார். அவருடன் இணைந்து ரோகித் சர்மா தனது அதிரடியை காட்ட ஆரம்பித்தார். சிறப்பாக ஆடிய டோனி 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோர்தசா பந்துவீச்சில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 170. மேலும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.
இறுதியில் இந்திய அணி 36.2 ஒவேரில் 174 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.