
tamil movie actor - aththi balan
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாமா, செல்லக்கூடாதா என்று வழக்கு நடைபெற்று வந்த நிலையில் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பை தான் வரவேற்பதாக நடிகை அதிதி பாலன் கூறியுள்ளார்.
நடிகை அதிதி பாலன் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், ஈரோட்டிற்கு முதல்முறையாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்சமயம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, இந்த தீர்ப்பை நான் மிகவும் வரவேற்கிறேன்.
நான் வக்கீல் தொழிலுக்கு படித்திருக்கிறேன் ஆனால் முழுமையாக பயிற்சியில் ஈடுபட வில்லை. அதற்குள் சினிமா வாய்ப்பு வந்ததால் திரைப்படத்தில் நடிக்க வந்து விட்டேன் நான் நடித்தது வெளியான அருவி படம் படம் போல் சமூக விழிப்புணர்வு உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று பலரும் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த அருவி படம் எய்ட்ஸ் நோயாளிகளை ஒதுக்கி வைக்க கூடாது அவர்களும் சமூகத்தில் ஒரு அங்கத்தினர் என்ற கருத்தை மையமாக வைத்து வெளிவந்தது. இந்த படத்தில் யாரும் ஏற்க துணியாத கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி ஒரு சிறந்த நடிகையாக தன்னை அடையாளப்படுத்தினார்.
மேலும் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இந்தப் படம் நடிப்பதற்கு முன்பாக டாக்டர்கள், திருநங்கைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என அனைவரிடமும் சந்தித்து அவர்களிடம் அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். தற்பொழுது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். நான் சிறு வயதில் மூன்று முறை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வந்துள்ளேன்.
தமிழகம் பின்பற்றும் பாரம்பரியத்தின் காரணமாக இத்தனை காலம் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இனிமேல் நானும் சென்று வர வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் ஓரினச்சேர்க்கை, தகாத உறவு குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் வரவேற்பதாக அவர் கூறினார்.
Advertisement
Advertisement