சபரிமலை: ஸ்மிருதி இராணியின் கருத்துக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள சித்தார்த்.

சபரிமலை: ஸ்மிருதி இராணியின் கருத்துக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள சித்தார்த்.



sabarimalai---siddharth---smirthirani

சபரிமலை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்த பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த் சென்னை மழை வெள்ளத்தின் போது நேரடியாக களமிறங்கி மக்களுக்கு உதவினார். தொடர்ந்து தற்போது எழுந்த #MeToo விவகாரம் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்தார். இவ்வாறு சமூக பிரச்சினைகளுக்கு நேரடியாக களமிறங்கியும் தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Tamil Spark

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் சபரிமலை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறாக பதிலளித்தார். மாதவிடாய் ரத்தம் படிந்த நேப்கினை நண்பர்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல முடியுமா? முடியாது. நமது நண்பர்கள் வீட்டுக்கே அதை எடுத்து செல்ல முடியாத போது, கோயிலுக்குள் எப்படி எடுத்து செல்ல முடியும்? என்று பதில் அளித்தார். 

ஸ்மிருதி ராணியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்து வரும் நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில். 



 

கோயிலுக்கு வரும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் டயபர் அணிந்து வருகின்றனர். பெண்கள் சுகாதாரத்தை காப்பாதற்கு தான் நேபின்கள் பயன்படுத்தப்படுகின்றன. நேபின்களை பெண்கள் கோயிலுக்குள் கொண்டு செல்வதால், அதன் புனிதம் கெட்டுவிடாது. மாதவிடாய் ஏற்படுவது அவமானம் இல்லை” என சித்தார்த் பதிவிட்டுள்ளார்.