தமிழகம் சமூகம்

ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி; மனதை உருக்கும் சம்பவம்..!!

Summary:

lover susite matter krishnakiri

ஓசூர் அருகே ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகள் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டையில் அனுமப்பா என்பவரும் இவரது மகன் ஏமண்ணாவும் வசித்து வருகிறார்கள். ஏமண்ணா 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சூரப்பா என்பவர் இவர்களது வீட்டிற்கு எதிரில் வசித்து வருகிறார். இவருக்கு சூரம்மா (21) என்ற மகள் இருக்கிறார். 

இந்த நிலையில், சூரம்மா மற்றும் ஏமண்ணா இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரே ஊர்; ஒரே பகுதி; ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் காதலித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் இரு வீட்டாருக்கும் பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இதனால் தங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்து இருவரும் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள புளிய மரத்தடியில் ஒரே கயிற்றில் இரு முனைகளிலும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். இதனை கண்டவர்கள் மனதுருக்கும் படி இருந்தது இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 


Advertisement