வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
இறந்தவரின் உடலுக்கு 3 நாட்கள் சிகிச்சை; அம்பலமானது தனியார் மருத்துவமனையின் ஊழல்!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஈசனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
இதனால் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமணையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் அவருக்கு தீராத வலி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அங்குள்ள மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சேகரின் குடும்பத்தினர் சார்பில் ரூபாய் 5 லட்சம் கட்டண தொகையாக செலுத்தப்பட்டது. ஆனால் சேகரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் யாரும் அவரைப் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து பணம் பறிக்கும் நோக்கத்தோடு மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டதால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை மற்றொரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் மூன்று நாட்களுக்கு முன்பு இறந்தது தெரியவந்தது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மூன்று நாட்களாக ஏமாற்றிய தஞ்சை தனியார் மருத்துவமனையின் மீது காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணைக்கு பின்பு மருத்துவமனையின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என இறந்தவரின் உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.