தமிழகம் இந்தியா சமூகம்

நீதிபதியின் மனைவிக்கு மல்லிகைபூ, அல்வா பார்சல்!! பரபரப்பை ஏற்படுத்திய இந்து முன்னணி அமைப்பினர்

Summary:

high court - judge wife - parsal

இந்து மக்கள் கட்சியினர், தகாத உறவு குற்றம் இல்லை என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் மிஸ்ராவை கண்டித்து அவருடைய மனைவிக்கு மல்லிகைப்பூ, அல்வா பார்சல் அனுப்ப முயன்றது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய தண்டனை சட்டம் 497 இன் படி, தகாத உறவு குற்றமாக கருதும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் திருமண உறவில் பாதிப்பு ஏற்பட்டால் விவாகரத்து செய்யலாம் தகாத உறவு என்பது தனிப்பட்ட ஒருவரின் விருப்பம் அதை குற்றமாக கருத முடியாது என்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு சில தரப்பினர் ஆதரவையும் சில தரப்பினர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் மனைவிக்கு மல்லிகைப்பூ, அல்வா பார்சல் அனுப்ப முயன்றனர்.

இதற்காக, இந்து முன்னணி மாநில அமைப்பின் தலைவர் ஆசைத்தம்பி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் விழுப்புரத்தில் உள்ள கொரியர் அலுவலகத்திற்கு வந்தனர். தகவலறிந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.


Advertisement