நடிகர் சித்தார்த்: அச்சம் மிகப்பெரிய மௌனத்தை ஏற்படுத்தும். #MeToo பற்றி அதிரடி டுவிட்.!!
தற்போது சினிமா பிரபலங்கள் மற்றும் ஏராளமான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூகவலைதளங்களில் #MeToo என்று பதிவிட்டு வருகின்றனர். முதன்முதலாக பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது புகார் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பாடல் பாடகி சின்மயி ஏழு முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரும் மற்றும் இது வரை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் சித்தார்த் ஆகியோர் சின்மயிக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், அச்சம் என்பது மிகப்பெரிய மௌனத்தை ஏற்படுத்திவிடும். பாலியல் சீண்டலுக்கு ஆளானவர்கள் சில ஆண்டுகளுக்கோ அல்லது எப்போதுமோ அமைதியாக இருக்கக்கூடும்.
Fear is a great silencer. For years, and sometimes forever, it silences the abused. Then when #MeToo and #TimesUp happens it silences the abusers, apologists and enablers. #TamilMedia #TamilPolitics and #TamilCinema are very very silent right now. Let's talk. Now!
— Siddharth (@Actor_Siddharth) October 11, 2018
ஆனால் மீ டூ போன்ற விழிப்புணர்வு ஏற்பட்டாலும் மற்றும் அதற்கான சரியான நேரம் வரும் போதும் குற்றவாளிகள் மௌனமாகி விடுவர். தற்போது தமிழ் ஊடகங்களும், தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும் மிகமிக அமைதிகாத்து வருகின்றன. இதுகுறித்து வாய் திறக்க வேண்டியது அவசியம். அதுவும் இப்போதே! என்று பதிவிட்டுள்ளார்.