காதல் – உறவுகள் 18 Plus

உங்களுக்கு ஆண்மை இல்லை என்ற பயமா?.. உடலுறவில் நாட்டம் இல்லையா?..! உண்மை இதுதான்.!!

Summary:

உங்களுக்கு ஆண்மை இல்லை என்ற பயமா?.. உடலுறவில் நாட்டம் இல்லையா?..! உண்மை இதுதான்.!!

தாம்பத்தியத்தின் போது ஏற்படும் ஏமாற்றத்தால், ஆண்கள் ஆண்மை இல்லை என்று பயம் கொள்கின்றனர். இந்த பயத்தை பற்றி இன்று காணலாம். 

காலகட்டத்தின் மாற்றத்திற்கு ஏற்ப கையடக்க செல்பேசியில் அனைத்தும் பார்த்து, காதுகளில் அரசல் புரசலாக தகவலை கேட்டு, மற்றொரு கைகளால் தங்களின் சந்ததி உயிர்துளியை பலரும் விரயம் செய்து வருகின்றனர். ஆண்மைக்குறைவு தொடர்பாக ஆண்களிடம் நிலவும் கருத்துக்களாக ஆண்குறி சிறியதாக உள்ளது, விந்து விரைந்து வெளியேறுகிறது, தூக்கத்தில் விந்து வெளியேறுகிறது, சுய இன்பம் செய்தல் தவறு போன்றவை உள்ளது. 

உடலுறவில் ஆண் குறி சிறிது என்பது பிரச்சனையே இல்லை. ஏனெனில் உடலுறவு கொள்வதற்கு குறைந்த அளவு கொண்ட ஆண்குறியே போதுமானது. ஆணின் செயல்பாடுகள் முதற்கட்ட பகுதியில் சிறப்பாக அமைந்துவிட்டால், பிற்பாடு புணர்ச்சிகள் பெண்ணுக்கு தேவையான இன்பத்தை வழங்கி பரிசாக முத்தத்தை பெற்றுத்தர வைக்கும். ஆண்குறியின் அளவு பெரிதாக இருந்தால் பெண்ணுக்கு சந்தோசம் கிடைக்கும் என்ற பொருள் அர்த்தமற்றது. பெண்ணின் பெண்ணுறுப்பு ஆழம் சிறிதளவு இருக்கும் பட்சத்தில், ஆண்குறியின் அளவு பெரிதாக இருந்தால் பெண்ணுக்கு வலியே மிஞ்சும். 

விந்தணு விரைவாக வெளியேறுவது ஆண்மைக்கு உண்மையில் நல்ல அறிகுறி. விஞ்ஞான கூற்றுப்படி, உடலுறவு மேற்கொள்தலில் 2 நிமிடமே அதிகபட்சம் என்றும் கூறப்படுகிறது. அதிக நேரம் உடலுறவு மேரோக்கண்டால் தான் ஆண்மை என்பது தவறான கூற்றாகும். உறக்கத்தில் விந்து வெளியேறுதல் இயற்கையான நிகழ்வு. விந்து உற்பத்தி அதிகமாக இருக்கும் பட்சத்தில், விந்து இயற்கையாகவே விந்துப்பையில் இருந்து சிறுநீர் குழாய் வழியாக வெளியேறும். இது தவறான எண்ணத்தை விளைவிக்க வாய்ப்பு இல்லை. நாம் காதில் கேட்ட சில உண்மையற்ற கூற்றே அவ்வாறான சிந்தனையை ஏற்படுத்தும். 

விரைவில் விந்தணு வெளியேறாமல் இருக்க, சிறுநீர் கழிக்கையில் தொடர்ந்து கழிக்காமல், சிறிது சிறிதாக கழிக்கலாம். காலை நேரத்தில் யோகா செய்தல் நல்ல பலனை தரும். ஓரிதழ் தாமரை இலைகளை விடியும் முன் தினமும் சாப்பிட்டு பால் குடித்து வந்தால், தாம்பத்திய பலவீன பிரச்சனைகள் சரியாகும். முருங்கை பூவினை காய்ச்சி பாலுடன் சேர்ந்து குடித்து வரலாம். ஆண்மை அதிகரிக்க அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மாதுளை பழத்தை தினமும் இரவில் சாப்பிடலாம். 


Advertisement