கல் நெச்சையும் கரைய வைக்கும் காட்சி.... ஒரே லைப் ஜாக்கெட்டில் கட்டியணைத்தபடி அம்மா -மகன்! பலத்த காற்றால் படகு விபத்தில் நடந்த கொடூரம்!!!
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பார்கி அணை பகுதியில் நடந்த படகு கவிழ்வு, நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நர்மதை ஆற்றில் சுற்றுலா சென்றிருந்தவர்களுடன் படகு புரண்டதில், பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் அவசரமாக நடைபெற்று வருகின்றன.
சூறாவளி காற்றில் நிலைதடுமாறிய படகு
தகவலின்படி, 29 பேருடன் சென்ற சுற்றுலா படகு, திடீரென வீசிய பலத்த காற்றால் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சில நிமிடங்களிலேயே படகு கவிழ்ந்தது. இதில் பலர் நீரில் மூழ்கிய நிலையில், அருகிலிருந்த மீட்புக் குழுக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தன.
இந்த படகு விபத்து குறித்து உயிர் தப்பியவர்கள் கூறுகையில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றும், பணியாளர்களின் கவனக்குறைவு இருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: BREAKING: அருவியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு! சற்றுமுன் சடலங்கள் மீட்பு!! பெரும் சோகம்!!!
ஒரே லைப் ஜாக்கெட்டில் தாய்-மகன் சோகம்
மீட்பு பணியின் போது, ஒரே லைப் ஜாக்கெட்டில் ஒன்றாக கட்டியணைத்தபடி கிடந்த தாய் மற்றும் அவரது 4 வயது மகனின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த காட்சி மீட்புப் படையினரையே உணர்ச்சிவசப்படுத்தியது. மனிதநேயத்தை சுட்டிக்காட்டும் இந்த சம்பவம், பலரையும் உலுக்கியுள்ளது.
திருச்சி குடும்பம் சிக்கியது
இந்த நர்மதை ஆறு விபத்தில், திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த காமராஜ் குடும்பத்தினரும் சிக்கியுள்ளனர். அவரது மனைவி கார்குழலி மற்றும் உறவினர் சவுபாக்கியம் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. காமராஜ் மற்றும் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரு குழந்தைகள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மாநில அமைச்சர் ராகேஷ் சிங் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மகிழ்ச்சியான சுற்றுலா ஒரு குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய துயரமாக மாறியது, திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.