செல்போனுடன் கழிவறைக்குள் சென்ற இளைஞன்!! கழிவறைக்குள் நடந்த சோக சம்பவம்!!

செல்போனுடன் கழிவறைக்குள் சென்ற இளைஞன்!! கழிவறைக்குள் நடந்த சோக சம்பவம்!!


young-boy-struggling-in-toilet


சீனாவில் 8 வயது ஒருவன் கழிவறைக்குள் சென்றுள்ளான். அவன் செல்லும்போது, கூடவே கேம் விளையாடுவதற்காக செல்போனையும் எடுத்து சென்றுள்ளான். உள்ளே சென்ற அவன் நீண்ட  நேரமாக கழிவறைக்குள் உட்கார்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளான்.

சிறுவன் நீண்ட நேரமாக கழிவறைக்குள் உக்கார்ந்து இருந்ததால், உடலின் பிற்பகுதி வெஸ்டர்ன் டாய்லட்டுக்கு உள்ளே சிக்கிக்கொண்டது. சிறுவன் அவனது உடலை வெளியே எடுக்கமுடியாமல் கதறி அழுதுள்ளான்.

இதனையடுத்து மகன் கதறி அழும் சத்தம் கேட்டு பதறிப்போய் ஓடி வந்த சிறுவனின் தாய், அவரது மகனின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உடனே சிறுவனை வெளிய தூக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் சிறுவனின் தாயால் மகனை வெளியே எடுக்க முடியவில்லை. 

இதனையடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்துவந்த  மீட்பு குழுவினர் சிறுவனை போராடி வெளியே எடுத்துள்ளனர். செல்போன் விஷயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது என்பதை இந்த சம்பவம் அணைத்து பெற்றோர்க்கும் உணர்த்தியுள்ளது.