முதல்ல என் மகனை காப்பாத்துங்க.. மகனுக்காக தனது உயிரை தியாகம் செய்த WWE வீரர்! கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்! - TamilSpark
TamilSpark Logo
உலகம் விளையாட்டு

முதல்ல என் மகனை காப்பாத்துங்க.. மகனுக்காக தனது உயிரை தியாகம் செய்த WWE வீரர்! கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் அங்கு நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அங்கு பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடற்கடைகள் மூடப்பட்ட நிலையில் அவை சில தினங்களுக்கு பின்பு மீண்டும் திறக்கப்பட்டது .

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் வெனிஸ் கடற்கரை பகுதிக்கு பிரபல WWE வீரர் ஷாட் காஸ்பார்ட் தனது 10 வயது மகனை அழைத்து சென்றுள்ளார். மேலும் அங்கு மகனுடன் நீச்சலடித்துள்ளார். அப்பொழுது அங்கு ஆக்ரோஷமாக 6 அடி உயரத்தில் அலைகள் எழுந்துள்ளது இந்நிலையில் ஷாட் காஸ்பார்ட் மற்றும் அவரது மகன் இருவரும் அலைகளில் சிக்கி உள்ளே இழுத்து செல்லப்பட்டனர், இதனை கண்ட கடற்கரை பாதுகாப்பாளர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மகனைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்த ரெஸ்லிங் வீரர்

ஆனால் ஷாட் காஸ்பார்ட்  அதிக எடை கொண்ட உடலைக் கொண்டவராக இருந்ததால், கடற்கரை பாதுகாப்பாளர்களால் அவரை எளிதாக மீட்க முடியவில்லை. இந்நிலையில் அவர் முதலில் எனது மகனை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.உடனே அவர்கள் ஷாட் காஸ்பார்டை விட்டுவிட்டு, அவருடைய 10 வயது மகனைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர் ஷாட் காஸ்பார்டைகாப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவரை அலைகள் அடித்து சென்றுவிட்டது.

பின்னர் தீவிர மீட்டுபணியில் ஈடுபட்டும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து நேற்று அவரது சடலம் கரை ஒதுங்கியது.  இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo