உலகம் Covid-19 Corono+

மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் 5 வது இடத்தில் சீனா.! கொரோனா பாதிப்பு காலத்தில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு.!

Summary:

World safest counties list during corono crisis

கொரோனா காலத்தில் மக்கள் வசிக்க மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், கொரோனா வைரஸ் உருவான இடமனா சீனா பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது.

ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் நிறுவனம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்ட செயல்திறன், அரசாங்க மேலாண்மை திறன், கண்காணிப்பு மற்றும் கண்டறிதல், அவசர சிகிச்சை தயார்நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கொரோனா சமயத்தில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் இஸ்ரேல் முதல் இடத்திலும், ஜெர்மனி இரண்டாவது இடத்திலும், தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளது. 5 வது இடத்தில் வைரஸ் உருவான இடமான சீனா இடம்பெற்றுள்ளது. முதல் பத்து நாடுகளின் பட்டியல் இதோ.

1. இஸ்ரேல்
2. ஜெர்மனி
3. தென் கொரியா
4. ஆஸ்திரேலியா
5. சீனா
6.நியூசிலாந்து
7. தைவான்
8. சிங்கப்பூர்
9. ஜப்பான்
10. ஹாங்காங்


Advertisement