சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
குறைப்பிரசவத்தில் வெறும் 21 வாரங்களில் பிறந்த குழந்தை! 283 கிராம் எடை! தாயும் சேயும் நலம்! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த குழந்தை!
அமெரிக்காவின் லோவா மாநிலத்தைச் சேர்ந்த ரண்டால் கீன் மற்றும் மோலி தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. ‘நாஷ் கீன்’ எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, பிறந்ததிலிருந்தே உலகளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏனெனில், நாஷ் தாயின் கருவில் இருந்து வெறும் 21 வாரங்கள் (133 நாட்கள்) மட்டுமே இருந்த நிலையில், குறைப்பிரசவமாக வெளிவந்தார். பிறந்தபோது அவர் எடை 283 கிராம் மட்டுமே. இது ஒரு உலக சாதனையாக மாறியுள்ளது.
இந்நிலையில், நாஷ் கீன் தற்போது ‘உலகில் மிகக் குறைந்த காலத்தில் குறைப்பிரசவமாகப் பிறந்த குழந்தை’ என்ற கின்னஸ் சாதனையை உருவாக்கியுள்ளார். இதற்கு முன் 2020-ஆம் ஆண்டு அலபாமாவில் பிறந்த குழந்தை இந்த சாதனையை வைத்திருந்தது. ஆனால், நாஷ் அந்த சாதனையை முறியடித்து உலக சாதனை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: அய்யோ.. பிஞ்சு குழந்தை.. 11 மாத குழந்தையின் சடலத்தை தென்னந்தோப்பில் மர்மமாக புதைத்த பெற்றோர்! நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்..
பிறந்ததிலிருந்து நாஷ், அயோவா பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையில் சுமார் 6 மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துத் தீவிரமாக கவனிக்கப்பட்டார். உடல்நிலை மிக நுணுக்கமாக கண்காணிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவர் வீட்டுக்கு அனுமதிக்கப்பட்டார்.
தற்போது, நாஷ் தனது முதல் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். “குழந்தையின் உயிர் தற்காத்தது கடவுளின் அருள் மற்றும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு தான்” என பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். குழந்தையின் இந்த சாதனை அமெரிக்கா மட்டுமின்றி உலகத்தையே பெருமிதப்படுத்தியுள்ளது.