உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த பெண் ஆண்களை நிமிர்ந்து பார்த்துவிட்டால் அவ்வளவுதான்..! இவ்வளவு அழகான பெண்ணிற்கு இப்படி ஒரு வியாதியா..?

Summary:

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மிகவும் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மிகவும் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் வசித்துவருகிறார் கிறிஸ்டி பிரவுன். தற்போது 32 வயதாகும் இவர் மிகவும் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆம், விஷால் நடிப்பில் வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில், எந்த ஒரு உணர்ச்சி பூர்வமான சம்பவமாக இருந்தாலும், பெரிதாக சத்தம் கேட்டால் கூட விஷால் மயங்கி விழுந்து தூங்க ஆரம்பித்துவிடுவார்.

Woman avoids making eye contact with men, she suffers from cataplexy

அதேபோல் ஒரு நோயினால்தான் பாதிக்கப்பட்டுள்ளார் கிறிஸ்டி பிரவுன். அவர் ஒரு வகையான அபூர்வ மூளை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். உணர்ச்சிபூர்வமான சமப்வம், கோபம், சிரிப்பு, பயம் அல்லது கவர்ச்சி இப்படி ஏதுவாக இருந்தாலும் கூட இவர் உடனே மயங்கி விழுந்து விடுவார்.

இதில் சற்று மேலும் வித்தியாசமாக, இவர் வெளியே செல்லும்போது சற்று கவர்ச்சியான ஆண் ஒருவரை பார்த்துவிட்டால் உடனே மயங்கி விழுந்துவிடுவாராம். இதனால் வெளியிலையே செல்ல பயப்படும் இவர், அப்படி சென்றால் கூட, குனிந்த தலை நிமிராமல் சென்றுவிட்டு, உடனே வீடு திரும்பிவிடுவாராம்.

Woman avoids making eye contact with men, she suffers from cataplexy

இந்த அனுபவம் குறித்து பேசியுள்ள அவர், இந்த வியாதியினால் தாம் மிகவும் மனஉளைச்சலில் இருப்பதாகவும், மற்றவர்களைப்போல் தம்மால் வாழ முடியவில்லை எனவும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.


Advertisement