இனி என்னால் முடியாது.. . மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தையால் கணவன் செய்த அட்டூழியம்! கோபத்தை தூண்டும் வைரல் வீடியோ!!!
அமெரிக்காவில் குடும்பச் செலவுகளை பல மாதங்களாக தனியாக ஏற்றுச் சென்ற பெண் ஒருவர், கணவரின் கார் பழுதைச் சரிசெய்ய "இனி என்னால் பணம் வழங்க முடியாது" என தெரிவித்ததைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
குடும்பச் செலவுகளை ஏற்ற மனைவி
இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, அந்தப் பெண்ணின் கணவர் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டு வாடகை, அன்றாடச் செலவுகள் மற்றும் பிற நிதிச் சுமைகளை மனைவியே தனியாகச் சமாளித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: தில்லாலங்கடி தனம்! நான்தான் இவரை வரச் சொன்னேன்.... சத்தம் போடாமல் இங்கிருந்து கிளம்பு! கணவனை மிரட்டிய மனைவி..வைரல் சண்டை வீடியோ..!!
பணம் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறு
இதற்கிடையில், கணவரின் கார் பழுதடைந்த நிலையில் அதைச் சரிசெய்ய தேவையான பணத்தை வழங்குமாறு அவர் மனைவியிடம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குடும்பச் செலவுகளே பெரும் சுமையாக இருந்ததால், தன்னால் அந்தத் தொகையை என்னால் வழங்க முடியாது என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அந்த நபர் குடும்ப தகராறு காரணமாக மனைவியின் ஆடைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்களை வீட்டின் வெளியே தூக்கி வீசியதுடன், அவரையும் வீட்டை விட்டு வெளியேறச் செய்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரலான புகைப்படம்; இணையத்தில் கண்டனம்
வீட்டின் வாசலுக்கு வெளியே பெண்ணின் உடமைகள் சிதறிக் கிடக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தச் சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து, குடும்ப உறவில் பரஸ்பர மரியாதையும் பொறுப்பும் முக்கியம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், அமெரிக்காவில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளனவா என்பது குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் இல்லை.
امرأة أمريكية زوجها ترك عمله منذ 4 اشهر وتولت هي دفع جميع الفواتير والمصاريف بمفردها
— مستر (@5_8fm) July 10, 2026
وبعدها خربت سيارة زوجها وطلب منها انها تدفع تكاليف اصلاح سيارته ورفضت انها تدفع لانها بالكاد تتدبر امور المنزل والفواتير بعد الرفض حدث جدال بينهم
وقام زوجها برمي جميع ممتلكاتها الخاصة خارج… pic.twitter.com/K3Lh8otQLb
இதையும் படிங்க: இதுதான் விதியின் சதி! கோடியில் புரண்ட மனுஷன்.... இப்போ ரோட்டோரமா இருக்கும் கதி! கோடீஸ்வர தாத்தாவின் கண்ணீர் வரவைக்கும் வீடியோ..!!!!